--- --:--:-- --

இராமநாதபுரத்தில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி..கொடுத்தவுடன் பறித்துக் கொண்டதால் மாணவா்கள் அதிர்ச்சி..!

7d0921c2-efaf-41af-9285-ea9e0cb31883

இராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பயின்ற 9,939 மாணவ, மாணவியருக்கு ரூ.12 கோடியே 29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், 2018 – 19 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 1 பயிலும் 9,018 மாணவ, மாணவியருக்கு ரூ.11 கோடியே 15 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பிலும், பிளஸ் 2 பயிலும் 9,532 மாணவ, மாணவியருக்கு ரூ.11 கோடியே 79 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலும் 18,550 மாணவ, மாணவியருக்கு ரூ.22 கோடியே 94 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

 

இதில் முதல் கட்டமாக 4,926 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் இலவச மடி கணினிகளை தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் வழங்கிய அனைத்து மடிக்கணினியும் உடனிருந்த அதிகாரிகள் திரும்ப பெற்றதால் மாணவா்கள் மனமுடைந்து சென்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மணிகண்டன்:- தமிழக பள்ளி பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச மடிகணினி வழங்கும் திட்டம் 2011 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டது. தற்போது வரை 39 லட்சம் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 1, பாலி டெக்னிக் மாணவ, மாணவியருக்கும் இலவச மடி கணினி விநியோக திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

 

முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாம் பெயரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி நடப்பு கல்வி ஆண்டில் ராமேஸ்வரத்தில் உறுதியாக தொடங்கப்படும். கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.600 கோடி மதிப்பில் உவர் நீரை நன்னீராக்கும் திட்டத்தை சாயல்குடி அருகே குதிரை மொழி எனும் இடத்தில் அரசு நிறைவேற்ற உள்ளது. மணல் கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்கும் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon