பிரதமருக்கு 11 வயது சிறுமி எழுதிய உருக்கமான கடிதம் ..

போலந்து நாட்டின் 11 வயது சிறுமி ஒருவர் தன்னையும் தனது தாயயையும் மீண்டும் இந்தியாவிற்கு வர உதவும் படி பிரதமர் மோடிக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ள போலந்து நாட்டை சேர்ந்த 11 வயது சிறுமி அலிக்ஜா வனாட்கோ தனது தாய் மார்தா உடன் தங்கியிருந்து கோவா மாநிலத்திலுள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார்.

விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருந்ததாக தாய் மார்தாவை நாடு கடத்தபட்ட தொடர்ந்து சிறுமியை அழைத்து செல்வதற்காக தாய்க்கு நிபந்தனையோடு கூடிய அனுமதி வழங்கபட்டது. கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி சிறுமி தனது தாயுடன் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பபட்டார். இந்நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பதவி ஏற்றதை தொடர்ந்து சிறுமி அலிக்ஜா மோடிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மத்திய அமைச்சர் ஜெய் சங்கர்
மத்திய அமைச்சர் ஜெய் சங்கர்

அதில் தான் கோவாவில் உள்ள தன் பள்ளியை நேசிப்பதாகவும், விலங்கு மீட்பு மையத்தில் தான் செய்து வந்த தன்னர்வு தொண்டு சேவையை இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டு கடிதம் எழுதியிருக்கிறார்.மேலும் தாயுடன் கேதார் நாட்டில் உள்ளிட்ட கோவிலுக்கு சென்ற அனுபவத்தையும் குறிப்பிட்டுள்ளார்.கருப்பு பட்டியலிட்டிருப்பதை நீக்க வேண்டுமென சிறுமி கடிதத்தில் எழுதியிருக்கிறார். தொடர்ந்து மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் சிறுமி அலிக்ஜா கடிதம் எழுதியுள்ளார்.


Leave a Reply