மகளின் திருமண விழாவில் பாடல் பாடிக்கொண்டிருக்கும் பொழுது மாரடைப்பால் மரணம்: தந்தை இறந்ததை மறைத்து திருமணத்தை நடத்திய நெகிழ்ச்சியான சம்பவம்!

Publish by: --- Photo :


கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் விஷ்ணு.இவர் தனது மகளுக்கு வரன் பார்த்து திருமண நாளையும் குறித்து அழைப்பிதழ் முதற்கொண்டு அச்சடித்து உறவினர்களையும்,விருந்தினர்களையும் அழைத்தாயிற்று.மனம் முழுவதும் சந்தோசத்துடன் இருந்த விஷ்ணு தன்னுடைய மகளின் திருமண சடங்கின் பொது உற்சாகமாக பாடல் பாடிக் கொண்டு இருந்தார்.அப்பொழுது, யாரும் எதிர்பாராத விதமாக திடீரென மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.

காவல் உதவி ஆய்வாளர் விஷ்ணு இறந்த விஷயத்தை மறைத்து மகளின் திருமணத்தை நடத்தியிருக்கிறார் விஷ்ணுவின் மனைவி.திருமணம் நடந்து முடிந்த பொழுது இவ்விஷயம் அரசல் புரசலாக மணப்பெண்ணுக்கு வந்தது.தந்தை இறந்த விஷயத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண் மேடையிலேயே கதறி அழுதது திருமணத்திற்கு வாழ்ந்த வந்திருந்த உறவினர்களையும்,விருந்தினர்களையும் கண்கலங்க வைத்தது.
இச்சம்பவம் கேரளத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply