கோவையில் இளைஞர் வெட்டிக்கொலை! தாயின் கண்முன்னே அரங்கேறிய கொடூரம்!!

கட்சியில் இருந்து விலகிய உறவினர் தாயின் கண்முன்னே குத்திக்கொலை. அரங்கேறிய கொடூர சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

 

கோவை தடாகம் சாலையில் உள்ள குமாரசாமி காலனியைச் சேர்ந்த 26 வயது ஜோதிடர் சந்தோஷ், அரசியல் கட்சி ஒன்றில் இருந்து அண்மையில் விலகியுள்ளார். அவரை மீண்டும் கட்சியில் சேருமாறு அதேகட்சியில் உள்ள உறவினர் விஜயகுமார் என்பவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், ஜோதிடர் சந்தோஷ் மறுத்து வந்த நிலையில், இருவருக்கும் இதுதொடர்பாக மோதல் போக்கு நிலவி வந்துள்ளது.

இந்நிலையில், தமது தாயாருடன் மோட்டர் சைக்கிளில் சென்ற சந்தோஷை வீரகேரளம் பகுதியில் மறித்த 3 பேர் கும்பல், கழுத்தை அறுத்துள்ளனர். இதில், மகனை காப்பாற்றுமாறு சந்தோஷின் தாயார் பிரேமலதா கதறி அழுதுள்ளார். ஆனால், ரத்த வெள்ளத்தில் மிதந்த சந்தோஷ், தாயின் கண்முன்னே உயிரிழந்துள்ளார்.

 

தகவலறிந்து வந்த போலீசார், சந்தோஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், உறவினர் விஜயகுமார் உள்ளிட்ட மூன்றுபேர், சந்தோஷை கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். கட்சியில் சேர மறுத்ததால், கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என தெரியாத நிலையில், தாயின் கண்முன்னே இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply