திருவாடானையில் குடிநீா் குழாயில் உடைப்பு-வீணாகும் தண்ணீர்

Publish by: திருவாடானை ஆனந்த் --- Photo :


திருவாடானை அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம். திருவாடாளை தாலுகா, சின்ன கீரமங்கலம், கல்லூர், பாரதிநகர் வழியாக குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த குடிநீர் குழாய் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாரதிநகர் 9-வது வீதீ விளக்கு ஆதிபராசக்தி கோவில் அருகே உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி சாலை ஓரத்தில் பாய்கிறது.

 

அதே போல் சின்ன கீரமங்கலம் கிராமத்தில் சாலை ஓரத்தில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகிறது. திருவாடானை பகுதி மக்கள் போதுமான குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

 

இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திருவாடானை உதவி செயற் பொரியாளருக்கு தொடர்பு கொண்டால், அவர் இணைப்பை ஏற்பதே கிடையாது. திருவாடானை தாலுகாவில் குடிநீர் வீணாகும் இடங்களை கண்டறிந்து சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply