ராஜீவ் காந்தியின் 28- வது நினைவு தினம் அனுசரிப்பு!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜீவ் காந்தி. இளம் வயதிலேயே அதாவது தமது 40வது வயதிலே இந்தியாவின் பிரதமர் ஆனார். நாட்டின் தலைமுறை மாற்றத்தை உணர்த்தும் தலைவராக ராஜீவ் காந்தி திகழ்ந்தார்.

 

தேசிய வரலாற்றில் ராஜீவ் காந்திக்கு முக்கிய பங்கு உண்டு. சுட்டுக் கொல்லப்பட்ட தனது தாயாரின் இறுதிசடங்க முடிந்த உடனே அவர் மக்களவை தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அந்த தேர்தலில் ஏழு ஆண்டுகளாக இல்லாத அளவு ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் வென்றது. 508 தொகுதிகளில் 401 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது.

 

இவர் ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு இன்றுடன் 27 வருடங்கள் நிறைவடைகின்றன.

இந்நிலையில் , முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 28வது நினைவு மவுன ஊர்வலம் இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்தது.

 

இராமநாதபுரம் மணிக்கூண்டு பகுதியில் ராஜிவ் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

முன்னதாக அரண்மனை முன் துவங்கிய மவுன ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் எம். தெய்வேந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர் எஸ்.எம். இதயத்துல்லா முன்னிலை வகித்தார். முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா எஸ். பாண்டியன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செல்வத்துரை அப்துல்லா, மாவட்ட தலைவர்கள் ஏ.எஸ்.விக்டர், ஜெ.ரமேஷ் பாபு, வழக்கறிஞர் அன்புச் செழியன், ஆர்ட் கணேசன், பாரி ராஜன், மாவட்ட செயலர்கள் எம்.பாலகிருஷ்ணன், உள்பட பலர் பங்கேற்றனர்.

 

அரண்மனையில் தொடங்கிய ஊர்வலம், வண்டிக்காரத் தெரு, வழிவிடு முருகன் கோயில் வழியாக அண்ணா சிலை முன் நிறைவடைந்தது.


Leave a Reply