அமெரிக்க ஐ.டி. துறையில் அவசரநிலை பிரகடனம்! அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவில், தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலையை, அந்த நாட்டு அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்துள்ளார்.

 

சீன தொலைதொடர்பு நிறுவனமான ஹூவாய் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி, சீனா பிறநாடுகளில் உளவு பார்த்து வருவதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சந்தேகம் தெரிவித்து வந்தனர்.

 

இந்நிலையில், அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அறிவுசார் விவகாரங்கள் திருடப்படுவதையும், உளவு பார்க்கப்படுவதையும் தடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலையை, அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு சேவைகளில் தீவிரமாக அதிகரித்து வரும் பாதிப்பு மற்றும் வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய, அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக, அதிபர் டிரம்ப் விளக்கம் தந்துள்ளார்.

 

இந்த உத்தரவில், எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை. எனினும், ஹூவாய் நிறுவனத்திற்கு எதிராகவே, இந்த உத்தரவை அவர் பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. அவசர நிலையால் வெளிநாட்டு தொலைதொடர்பு நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்களை பயன்படுத்திக்கொள்வது தடுக்கப்படும் சூழல் உருவாகும்.


Leave a Reply