கோவையில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு, 4 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல்

கோர்ட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் பட்டபகலில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக இரண்டு இளைஞர்களை அரிவாளில் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை கணபதி பழைய சக்தி சாலை காமராஜர் நகரைச் சேர்ந்தவர்கள் பிரதீப் மற்றும் தமிழ்வாணன். இவர்கள் இருவரும் கொலை முயற்சி வழக்கிற்காக கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில் கையெழுத்திட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று இருவரும் வழக்கம்போல கையெழுத்திட்டு விட்டு அவினாசி சாலையில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது,அவர்களை பின்தொடர்ந்து 2- இரண்டு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் இளைஞர்கள் இருவரும் நிலை தடுமாறி மயங்கிவுடன் அந்த கும்பல் விட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து தகவலறிந்து வந்த பந்தய சாலை போலீசார் இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். மேலும்,இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆணையாளர் எழிலரசு மற்றும் பந்தய சாலை காவல் ஆய்வாளர் தெய்வசிகாமணி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும்,இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ் ,ஹரி, தனபால் ,சூர்யா ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் நடைபெற்ற இந்த கத்திக்குத்துச் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply