விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

எல்.டி.டி.இ. எனப்படும் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், எல்.டி.டி.இ. எனப்படும் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள், இலங்கையில் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன.

 

எனவே, தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு பெருகி வருவதால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஸ்ரீபெரும்புதூரில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991 ஆம் ஆண்டு வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு பிறகு, இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply