குழந்தைக்கு பாடப்புத்தகம் வாங்க போறீங்களா? பாடநூல் கழகம் சொல்வதை கொஞ்சம் கேளுங்க!

வரும் கல்வியாண்டில் 12-ம் வகுப்பில் தாவரவியல், விலங்கியலுக்கு ஒரே புத்தகம் தான் என்று, தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.

 

கோடை விடுமுறைக்கு பின் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள், ஜூன் 3இல் தொடங்க உள்ளன. பெற்றோர்கள் குழந்தைகளுடன் விடுமுறை கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். எனினும் சில பெற்றோர்கள், பாட நூல்கள், நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்களை இப்போதே வாங்கி ஆயத்தப்படுத்துவர்.

 

இந்த நிலையில், பாடநூல் தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 12-ம் வகுப்பில் தாவரவியல், விலங்கியலுக்கு ஒரே புத்தகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 10,12 வகுப்புகளுக்கும் பாடப் புத்தகம் விற்பனைக்கு, தனியார் பள்ளிகள், தேவையான புத்தகங்களை பதிவு செய்து பெறலாம் என்று பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல், 3, 4, 5 வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்குமான புதிய பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவதாக அது தெரிவித்துள்ளது.


Leave a Reply