சமூக விரோதிகளை பாதுகாக்கும் முதல்வரும் சமூக விரோதி தான்! சூலூரில் முத்தரசன் காட்டம்!

பொள்ளாச்சி விவகாரத்தில், சமூக விரோதிகளை பாதுகாக்கும் முதல்வரும் சமூக விரோதி தான் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார்.

 

சூலூர் சட்டசபை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், சூலூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். கண்ணம்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

 

இத்தேர்தலில், திமுக கூட்டணி வெற்று பெறும். அதனால் தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவசர அவசரமாக 3 சட்டசபை உறுப்பினர்களை நீக்க முடிவு செய்துள்ளார். 3 பேரை நீக்கி விட்டால் தப்பித்து கொள்ளலாம் என்று எண்ணுகின்றார். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க சபாநாயகரால் முடியவில்லை.

 

தற்போது திமுக தலைவர், கெட்டிகாரதனமாக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார். மோடி, தான் பிரதமர் என்பதை மறந்து தரம் தாழ்ந்த நிலையில், ராகுல்காந்தி குடும்பத்தை தவிர வேறு எதுவும் பேசுவதில்லை. அந்த குடும்பத்தை பற்றி கொச்சைப்படுத்தி பேசுவதை தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியவில்லை.

 

நடிகர் சிவாஜி இருந்தால், நடிகர் திலகம் பட்டத்தை மோடிக்கு அளித்து விடுவார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதைப்போல மோடி வெளிநாட்டு பிரதமர். அரசியலமைப்பை மதிக்க வில்லை. தேர்தல் ஆணையம் தமிழகத்தில் எவ்வாறு செயல்படுகின்றது?

 

கோவையில் இருக்கும் வாக்குபதிவு எந்திரம் தேனிக்கு சென்றது.ஏன் ரகசியமாக இந்தசெயலை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும். மோடி என்ன நினைக்கின்றாரோ அதன்படி தேர்தல் ஆணையம், வருமான வரித்துறையும் செயல்படுகின்றது.

 

எங்கேயோ எடுத்த பணத்திற்கு துரைமுருகன் எப்படி பொறுப்பாவார். அங்கு தேர்தல் நிறுத்தப்பட்டது. அப்படி நிறுத்த வேண்டிய இடம் தேனி. அங்கு பண மழை பொழிகின்றது. தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக குறும்படம் தயாரித்த முகிலன் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. பொள்ளாச்சி சம்பவத்தில் எந்தனை பெண்கள் சீரழிக்கப்பட்டனர். அந்தசமூக விரோதிகளை பாதுகாக்கின்ற முதல்வரும் சமூக விரோதி தான். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசினார்.

 

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி, நா.கார்த்திக் எம்எல்ஏ, கிரி எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.


Leave a Reply