இனி உலகக்கோப்பை மீது மட்டும் தான் கவனம்! ஐ.பி.எல். தோல்விக்கு பிறகு தோனி பேட்டி!!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய தற்போது நேரமில்லை; ஏனெனில், உலகக் கோப்பைக்கு செல்ல வேண்டியுள்ளது என்று, சென்னை அணி கேப்டன் தோனி கூறினார்.

 

ஐ.பிஎல். கிரிக்கெட் தொடரை வெல்லும் என்று கருதப்பட்ட சென்னை அணி, இறுதிப் போட்டியில் போராடி தோற்றது. மும்பை அணியை 150 ரன்களுக்கு சுருட்டியதால், சென்னை அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்று கருதப்பட்டது.

 

அதுபோலவே, மும்பை அணியினர் சில கேட்சுகளை தவற விட்டு, சென்னை அணிக்கு வாய்ப்புகளை தந்தனர். எனினும் இறுதி கட்டத்தில் தோனி, வாட்சன் ஆட்டமிழந்தது உள்ளிட்ட தவறுகளால் சென்னை அணி, நூலிழையில் கோப்பையை தவற விட்டது.

 

இதன் மூலம், மும்பை அணி பட்டத்தையும், ரூ.20 கோடி பரிசையும் வென்றது. சென்னை அணிக்கு ரூ.12 கோடி 50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. ஆட்ட நாயகனாக பூம்ரா தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

 

இந்த தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் தோனி கூறியதாவது: ஆட்டத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் பங்களிப்பு சரியில்லை. பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். விக்கெட் தேவைப்படும் போது கைப்பற்றி தந்தனர்.

 

போட்டியில் இரு அணிகளுமே பல தவறுகளை செய்தன. எனினும் குறைந்த தவறு செய்த அணிக்கு கோப்பை சென்றுவிட்டது. எந்த இடத்தி தவறு நடந்தது என்று ஆராய தற்போது நேரமில்லை. ஏனெனில், அடுத்ததாக உலக்கோப்பை கிரிக்கெட்டிற்கு சென்றாக வேண்டும். அடுத்த ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தோனி கூறினார்.


Leave a Reply