இராமநாதபுரம் கலெக்டர் முகாம் முற்றுகை! சாதிச்சான்றிதழ் வழங்க பழங்குடியினர் கோரிக்கை

பழங்குடியினர் எனப்படும் காட்டு நாயக்கர் சமூகத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் முகாமை முற்றுகையிடப்பட்டதால், பரபரப்பு நிலவியது.

 

தமிழகத்தில், நாற்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு பழங்குடியின மக்கள் உள்ளனர். இருளர், காடர், குறும்பர், தோடர் போன்றோர்கள் பழங்குடிகள், அவர்களில் அடங்குவர். இவர்கள் பெரும்பாலும் காடும், காடுசார்ந்த நிலங்களிலும் வாழ்கின்றனர்.

 

அத்துடன், பணம் சார்ந்த பொருளாதாரத்தை, இவர்கள் அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. தங்களுக்கென தனி மொழியும், குடும்ப மற்றும் சமூகபழக்க வழக்கங்களையும் கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோரின் மொழி, தமிழுடன் நெருங்கிய தொடர்புடையது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இவ்வகையான மக்கள் தற்போதைய சூழலில் தங்களில் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர்.

 

 

இந்த நிலையில், பழங்குடி மக்களின் குழந்தைகள், 10 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க இயலவில்லை; எனவே, பழங்குடியினர் எனப்படும் காட்டு நாயக்கர் சமூகத்தினருக்கு, உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று, இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியரின் முகாமை, அவர்கள் திடீரென முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அவர்களுடன், அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.


Leave a Reply