காப்புரிமை என்ற பெயரில் ஒன்றரை கோடி ரூபாயை ‘ஏப்பம்’ விட்டாரா பிரபல நடிகர் விமல்?

காப்புரிமை தருவதாகக்கூறி நடிகர் விமல் விமல், ஒன்றரை கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாக, தயாரிப்பாளர் சிங்காரவேலன் பரபரப்பு புகார் ஒன்றரை தெரிவித்துள்ளார்.

 

பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் விமல் நடித்து வெளிவந்த களவாணி படம், வெற்றி பெற்றது. இதையடுத்து, அவரை கதாநாயகனாக வைத்து, களவாணி -2 படம் தயாரிக்க திட்டமிடப்பட்டு, படப்பிடிப்புகள் நடந்தன.

 

விமல், ஓவியா, சரண்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திய இயக்குனர் சற்குணம் இயக்கி இருக்கிறார். இம்மாதம் திரைக்கு வர தயாராக இருந்தது. இதற்கிடையே, இப்படத்தை வெளியிட கூடாது என்று தயாரிப்பாளர் சிங்காரவேலன் மிரட்டல் விடுப்பதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், சற்குணம் கடந்த 9ஆம் தேதி புகார் அளித்தார்.

 

 

இதை தொடர்ந்து, தயாரிப்பாளர் சிங்காரவேலன், காவல் ஆணையர் அலுவலத்திற்கு, விசாரணைக்கு ஆஜரானார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘களவாணி-2’ படத்தின் காப்புரிமையை கொடுப்பதாக கூறி நடிகர் விமல் என்னிடம் ரூ.1.5 கோடி வாங்கினார். அவர், திடீரென ‘களவாணி-2’ படத்தை சற்குணம் தயாரித்திருக்கிறார். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று கூற தொடங்கினார்.

 

உடனே, எங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டோம். அதற்கு, படத்தின் காப்புரிமையை வாங்கி தருவதாக சொன்னார். இப்போது படத்தின் தயாரிப்பாளர் சற்குணம், காப்புரிமையை இன்னொருவருக்கு கொடுத்துவிட்டதாக, மழுப்புகிறார். எங்களை திட்டமிட்டு நடிகர் ஏமாற்றிவிட்டதாக அவர் தெரிவித்தார்.


Leave a Reply