ஆறாம் கட்டமாக 59 மக்களவை தொகுதிகளில் இன்று தேர்தல்! ஆர்வமுடன் வாக்களிக்கும் பொதுமக்கள்!!

மக்களவை தேர்தலில் இன்று 6ஆம் கட்டமாக 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

 

இந்திய நாடாளுமன்றத்திற்கு, ஏப்ரல் 11இல் தொடங்கி, மே மாதம் 19ஆம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக, தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. இன்று, 6ஆம் கட்டமாக உத்தரபிரதேசத்தில் 14, அரியானாவில் 10, பீகார், மத்திய பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களில் தலா 8, டெல்லியில் 7, ஜார்கண்ட்டில் 4 என, மொத்தம் 59 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.

 

இந்த 59 தொகுதிகளில், 2014 நாடாளுமன்ற தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி 44 இடங்களை கைப்பற்றியது. டெல்லியில் 7 தொகுதிகளை கைப்பற்ற பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

 

மேனகா காந்தி, அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், மேற்கு வங்கத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேரன் சந்திரகுமார் போஸ் (பா.ஜ.க.), கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் (பா.ஜ.க.), குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங் (காங்கிரஸ்) ஆகியோர், இன்றைய தேர்தலை எதிர்கொள்ளும் முக்கிய தலைவர்கள் ஆவர்.

 

இறுதியாக 7ஆவது கட்டமாக, வரும் 19இல், 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிற வாரணாசி தொகுதியும் அடங்கும்.


Leave a Reply