தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் முகநூல் கணக்கு, விஷமிகள் சிலரால் முடக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் சட்டசபை உறுப்பினரும், தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சருமாக இருப்பவர், டாக்டர் எம்.மணிகண்டன் எம்.பி.பி.எஸ். – எம்.எஸ். அவரது முகநூல் கணக்கு, சமூகவிரோதிகள் சிலரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
எனவே, அவரது முகநூல் கணக்கில் பதிவிடப்படும் தகவல்கள், கருத்துகளை பொருட்படுத்த வேண்டாம் என்றும், இது தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை, இராமநாதபுரம் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியினர், சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். புதிய முகநூல் கணக்கினை ஆக்டிவேட் செய்தவுடன் அதிகாரபூர்வமான தகவல் அறிவிக்கப்படும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, அமைச்சரின் உதவியாளரை ‘குற்றம் குற்றமே’ இதழ் நிருபர் தொ டர்பு கொண்டு கேட்டபோது, இந்த தகவல் உண்மைதான். இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.