ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க தயார்! ஆனால்… முதலமைச்சர் போடும் கண்டிஷன் இதுதான்!

ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க வேண்டுமானால், டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதாக உறுதி அளிக்க வேண்டும் என்று, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்!

 

டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு பதவியில் உள்ளது. டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று, அவர் வலியுறுத்தி வருகின்றார்.

 

இந்நிலையில், டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிப்பதாக உறுதி அளித்தால், ராகுல் காந்தியை பிரதமராக ஏற்கத் தயார் என்று, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதை தெரிவித்தார்.

 

 

டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதாக இருந்தால் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க ஆதரவு அளிப்போம். எனக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. யார் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிக்க தயாராகவே உள்ளேன் என்றார் கெஜ்ரிவால்.

 

இதேபோல், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரதமரானால் ஆதரிக்க தயார் என்று ஏற்கனவே கெஜ்ரிவால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply