பொள்ளாச்சியில், காரில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி – உடுமலை சாலையில், தலைமை தபால் அலுவலகம் அருகே கிழக்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ஒரு காரை சோதனையிட்டதில், அட்டை பெட்டிகளில் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
அவ்வகையில், 18 அட்டைப்பெட்டிகளில் இருந்த சுமார் 300 கிலோ பான் மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த கோவை கணபதி அத்திப்பாளையத்தைச் சேர்ந்த அனந்தராமகிருஷ்ணனை கைது செய்தனர்.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்வதற்காக கோவை, கணபதியில் உள்ள குடோன்களில் இருந்து குட்கா கொண்டு வரப்பட்டது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்கிறது.