சபாநாயகர் நோட்டீசுக்கு எதிராக 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேர் சார்பிலும், திமுக தரப்பிலும் முறையீடு செய்துள்ளது.

 

ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கும் வகையில், அதிருப்தி எம்.எம்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி அ.பிரபு, விருத்தாசலம் வி.டி.க லைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சட்டசபை சபாநாயகர் தனபாலை சந்தித்து அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார்.

 

அதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், விளக்கம் கேட்டு 3 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினர். பதில் அளிக்க ஒரு வார அவகாசம் தரப்பட்டுள்ளது.

 

 

இந்நிலையில், சபாநாயகர் தனபாலின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையிட்டுள்ளது. அதில், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதால், 3 அதிமுக எம்.எல்.எக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 

மேலும், வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வில் திமுக தரப்பில் முறையிடப்பட்டது. திமுகவின் முறையீட்டை ஏற்று திங்கள்கிழமை வழக்கை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதேபோல், சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


Leave a Reply