திருநங்கைகளின் சாபம் பலித்துவிடுமா? ஜோதிட சாஸ்திரம் கூறுவது என்ன தெரியுமா?

இன்றைய உலகம், அரவாணிகள் எனப்படும் திருநங்கைளின் உணர்வை, வேதனையை புரிந்து கொண்டுள்ளது. ஆனாலும் கூட, பலரின் மனதில் இன்றும் கூட, அவர்களை பற்றிய ஒரு ஏளன மனநிலை இருக்கிறது. இது நிச்சயம் களையப்பட வேண்டும்.

 

கைத்தட்டி காசு கேட்கும் திருநங்கைகள் சிலர், காசு தராவிட்டால் சாபம் விடுவதும்; காசு தந்தால் ஆசி வழங்குவதையும் பார்க்கிறோம். துறவிகள் அல்லது பெரியவர்களை போல் திருநங்கைகள் ஆசி வழங்குவது ஏன்? அது பலிக்குமா என்ற கேள்வி, நம் மனதில் இயல்பாக எழக்கூடும்.

 

அரவாணிகள் எனப்படும் திருநங்கைகள், இறைவன் அர்த்தநாரீஸ்வரரின் நிலையாகும். அரவாணிகள், புதன் கிரகத்தின் அம்சம் என்று பழையமான ஜோதிடநூல் சகாதேவ மாலை குறிப்பிடுகிறது.

 

பண்டைய இதிகாசங்களில், ஆண் அல்லது பெண்ணால் அழிவு வரக்கூடாது என்று வரம் வாங்கு அரசுரர்கள், திருநங்கைகளால் அழிக்கப்பட்டதாக குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. மகாபாரதத்தில் அரவாணிகளை பலி கொடுத்த பிறகே, ஸ்ரீ கிருஷ்ண பெருமான், சில காரியங்களை செய்ததாக கூறப்பட்டுள்ளது.

 

எனவே, அரவாணிகளை வைத்துதான் சில காரியங்கள் செய்ய முடியும் என்று உள்ளன. அவற்றை, வேறு யாராலும் செய்ய முடியாது. கடைகளில் அரவாணிகள் காசு வாங்கிக் கொண்டு, பிறகு திருஷ்டி சுற்றி, கையை கீழே குத்தி முறித்து ஆசிர்வாதம் செய்வார்கள். இதுபோன்று அவர்கள் செய்வதால் கண் திருஷ்டி விலகும் என்ற நம்பிக்கை உள்ளது.


Leave a Reply