திருப்பூரில் ‘கொடி’ கட்டி பறக்குது பாலியல் தொழில்! மாமூலுக்காக மசாஜ் சென்டரை கண்டு கொள்ளாத காக்கிகள்!!

கொடியை காத்து, ஊரை உலகறிய செய்த குமரன் வாழ்ந்த திருப்பூரில், இன்று பாலியல் தொழில் கொடிகட்டி பறக்கிறது. பனியன் தொழிலில் ‘பின்னி’ எடுக்கும் திரூப்பூர், இன்று மசாஜ் என்ற பெயரில் நடக்கும் விபச்சார தொழிலிலும், ‘உச்சம்’ தொட்டு வருகிறது.

 

பெரு நகரங்களில் மட்டுமே காணப்படும் மசாஜ் சென்டர்கள், குடும்பத்தை விட்டு தொழிலுக்காக தங்கி பணி புரியும் திருப்பூரிலும் தற்போது பெருகிவிட்டது. சில நல்ல மசாஜ் சென்டர்களுக்கு மத்தியில், புற்றீசல் போல் போலி மசாஜ் சென்டர்கள் பெருகி, நகரின் நற்பெயரை கெடுத்து வருகின்றன.

 

விளம்பரத்தில் “தாராளம்’! உள்ளே ஏராளம்!!

 

மசாஜ் சென்டர் பெயரில் இவர்கள் பாலியல் தொழில் நடத்தும் முறையே வித்தியாசமானது. திருப்பூர் வசிக்கும் பெரும்பாலானோருக்கு, மசாஜ் சென்டர் குறித்த எஸ்.எம்.எஸ். வருகிறது. அதில், மசாஜ் நடத்தப்படும் இடம், முகவரி எதுவும். இருக்காது. ஆனால், தொடர்பு எண் மட்டும் இருக்கும். அதுவும், ஒரு வாரத்திற்கு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். சிக்கிக் கொள்ளக்கூடாது என்பற்காக, அடிக்கடி இப்படி செல்போன் எண்ணை மாற்றி விடுகின்றனர்.

 

மொபைல் போனுக்கு குறுந்தகவலாக வரும் மசாஜ் விளம்பரங்கள்

மசாஜ் சென்டர் குறித்த ஆன் -லைன் விளம்பரங்கள் கவர்ச்சிகரமாக இருக்கும். அதில், மசாஜ் வகைகள், மசாஜ் செய்யும் பெண்களின் வயது, கல்லூரி பெண்கள் முதல், நடுத்தர வயது பெண்கள் வரை ரகங்கள் போன்ற தகவல் இடம் பெற்றிருக்கும். ஆனால், அதிலும் முகவரி இருக்காது.

 

விளம்பரத்தில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டால், முழு முகவரியை கூற மாட்டார்கள். மசாஜ் சென்டர் அருகே உள்ள லேண்ட் மார்க் சொல்லுவார்கள். அங்கு போய் நின்றால், நாம் தனியாக தான் வந்திருக்கிறோமா என்பதை உறுதி செய்த பிறகு, முகவரியை தெரிவிப்பார்கள்.

 

‘ஜொள்ளுக்கு துட்டு”

 

எஸ்எம்எஸ் அல்லது விளம்பரங்களில், ரூ 999 முதல் 7000 வரை மசாஜ் என்றிருக்கும். மசாஜ் சென்டருக்கு சென்றுவிட்டால், குறைந்தது ரூ.1500 என்று, திடீரென அதிகரித்துவிடுவார்கள். அதுவும், ரூ. 1500 என்றால், வெறும் ஆயில் அல்லது பவுடரில் ‘தடவல்’ தான் என்பார்கள். இது விபசாரம் கிடையாது என்று சொல்லிவிட்டு, மசாஜ் செய்ய எந்த பெண் வேண்டும் என்று கூறி, சிலரை காட்டுவார்கள்.

 

 

அதுமட்டுமல்ல, ரூ. 1500க்கு 30 நிமிடம் மட்டுமே மசாஜ்; ஒரு மணி நேரம் என்றால்,ரூ.1000 தள்ளுபடியுடன், ரூ. 2000 போதும். எந்த தவறும் செய்துவிடக்கூடாது (!) என்றெல்லாம் எச்சரிப்பார்கள். ரூ. 3000 அல்லது ரூ. 4000 கட்டணம் செலுத்தினால், ஒரு மணி நேரத்திற்கு இரு பெண்கள் ‘மசாஜ்’ செய்ய வருவார்களாம்.

இருட்டு அறை! முரட்டு குத்து!!

 

 

அதேபோல், கட்டணம் அதிகமானால்,சாண்ட்விஜ் மசாஜ் என்றெல்லாம் ஆசையை தூண்டுவார்கள். ஆண் உள்ளாடை அணிந்திருக்க, பெண்கள் அரைகுறை அல்லது ஆடையின்றி வந்து மசாஜ் செய்வார். இருட்டு அறை! மங்கலான வெளிச்சம்!! சபல ஆண்களின் மனதை, இந்த சூழல் மாற்றிவிடுகிறது. மசாஜ் செய்யும் பெண்கள், வந்திருப்பவர் வசதியான பார்ட்டி என்று மோப்பம் பிடித்துவிட்டால், அவரது கதை முடிந்தது.

 

 

அவரிடம், மசாஜ் முடிந்து விட்டது… நீங்க விருப்பபட்டா, ஹேப்பி எண்டிங் பண்ணலாம். பி2பி அதாவது, “பாடி டூ பாடி” செய்யலாம்; அதற்காக, தனியாக குறைந்தது ஆயிரம் ரூபாயாவது வேண்டும் என்பார்களாம். இதில், பெண்களின் வயதை பொருத்து, தொகை வேறுபாடு இருக்குமாம். குடும்பத்தை விட்டு பிரிந்து தொழிலுக்காக திருப்பூரில் தங்கியிருக்கும் ஆண்கள், வட மாநில “ஜொள்ளர்கள்”, இத்தகைய மசாஜ் சென்டர்களுக்கு வாரம் தவறாமல் சென்று பணத்தை இழந்து வருகிறார்கள்.

 

மசாஜ் சென்டரிலும் மாமூல்! இது நம்ம ஊரு “காவல்”!!

 

வசதியான அல்லது சபல ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு, உண்மையான மசாஜ் செய்யாமல், ஏமாற்றி பணம் பறிக்கும் இத்தகைய போலி மசாஜ் சென்டர்களை காவல்துறையும் கொள்வதில்லை. தவறாமல் மாமூல் வருவதால், மசாஜ் சென்டர் பெயரில் நடக்கும் பாலியல் தொழிலை, தெரிந்தும் சில போலீசார் கண்டு கொள்வதில்லை. சட்டப்படி நடவடிக்கை எடுக்க, இன்னும் சில போலீசார் முயன்றால், மசாஜ் சென்டர் நடத்துவோருக்கு அரசியல் புள்ளிகள் சிலரின் ஆதரவு இருப்பது கண்டு, அடங்கிவிடுகிறார்கள்.

 

உழைப்பாளிகளை கொண்ட நகரம் என்று திருப்பூரின் பெருமையை பேசி வந்தாலும், இன்றைய திருப்பூரின் பரிதாபகர நிலை இதுதன. தொழிலாளர்கள் பலரும் வார இறுதி நாட்களில் டாஸ்மாக் பாரில் பணத்தை இழந்து வரும் சூழல் மாறி, இப்போது, போலி மசாஜ் சென்டரில் பணம் பறி கொடுத்து வருகின்றனர்.

 

 

இதனால், தொழிலாளர்களின் திறன் மங்குகிறது; பின்னலாடை உற்பத்தியின் வேகம் குறைகிறது. இளைஞர்கள், பட்டதாரிகள் , சம்பளத்தை இதுபோல் செலவிட்டு, தங்களையும், தங்களது குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்து விடுகின்றனர். பல குடும்ப பிரச்சனைகளுக்கும் இது வழிவகுப்பதாக, சமூக ஆர்வலர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

 

இதுபோன்ற போலி மசாஜ் சென்டரால், தனது மகனோ, மகளோ கூட வழிதவறி செல்லக்கூடும் என்ற பயமும், கவலையும் பொதுமக்களை போல், போலீசாருக்கும் இருக்க வேண்டும். தவறு செய்வது யாராக இருந்தாலும், குற்றம் குற்றமே என்று நீதி தவறாமல், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, திருப்பூரின் பெருமையை நிலை நாட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.


Leave a Reply