தமிழகத்தில் இன்று மழை..!
தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், சென்னையில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், பகல்நேர வெப்பநிலை குறைவாகவே இருக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இன்று இயல்பையொட்டியே இருக்கும் என கணித்துள்ள வானிலை மையம், நாளை முதல் 3 நாட்களுக்கு வட உள்தமிழ்நாட்டில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என கூறியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




