உலகிலேயே முதல்வர் பதவிக்கு ஏலம் நடந்தது இங்குதான்! பிரசாரத்தில் பொங்கிய பொங்கலூர் பழனிச்சாமி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தமிழகத்தில் முதல்வர் பதவி ஏலம் போடப்பட்டது போல் உலகத்தில் எங்கும் நடந்ததில்லை என்று, பொங்கலூர் பழனிச்சாமி பேசினார்.

 

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட செஞ்சேரிமலை, செஞ்சேரி அருகம்பாளையம், சந்திராபுரம் , சுல்தான்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

 

அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உள்ளாட்சி தேர்தலை கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடத்தவில்லை. எதிர்கட்சியினர் அதிக இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்ற அச்சம் தான் காரணம்.

 

 

13 மாநகராட்சிகள், அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால் திமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதி. திமுக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் அமைச்சர்கள் டம்மி ஆகிவிடுவார்கள்.

 

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஏழைகளின் தங்க நகை கடன் 5 சவரன் வரை தள்ளுபடி செய்யப்படும்; கேஸ் சிலிண்டர் விலை பழைய நிலைக்கு வரும்; கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும், ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்.

 

தமிழக முதல்வர் பதவி, எடப்பாடி பழனிச்சாமிக்காக வழங்கப்படவில்லை. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின், தமிழகத்தில் முதல்வர் பதவி ஏலம் போடப்பட்டது. இது போல் உலகத்தில் எங்கும் நடந்ததில்லை என்றார்.

 

முன்னாள் அமைச்சர் த.மோ.அன்பரசன், விவசாய அணி மாநில துணைத்தலைவர் தமிழ்மணி, ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.


Leave a Reply