பதவியை ராஜினாமா செய்து போடியில் நிற்க தயாரா? துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சுக்கு டிடிவி தினகரன் சவால்

ஓ.பன்னீர் செல்வம் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மீண்டும் போடியில் போட்டியிட முடியுமா என்றி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சவால் விடுத்துள்ளார்.

 

டிடிவி தினகரன் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவர, திமுக சார்பில் பேரவை செயலாளரிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து, இன்று மாலை கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக – டிடிவி தினகரன் இடையே உள்ள நெருக்கம் வெளிப்பட்டுவிட்டது என்று கூறியிருந்தார்.

 

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் நெருக்கம் உள்ளது. அரசு ஒப்பந்தங்களில் இரு கட்சிகளும் கூட்டாக உள்ளன. 3 எம்.எல்.ஏ.க்களும் அதிமுக உறுப்பினர்கள் தான். சட்டப் போராட்டம் இன்னமும் தொடர்கிறது.

 

ஓ.பன்னீர் செல்வதை பதவி விலகச் சொல்லி, போடியில் நிற்கச் சொல்லுங்கள், வெற்றி பெறுகிறாரா என்று பார்ப்போம். தேனியில் பணத்தை கொடுத்து, அவரது மகனின் வெற்றிக்கு படாதபாடு பட்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வின் கிளை கட்சியாக அதிமுகவை மாற்றிவிட்டனர். இதற்கு பேசாமல், அதிமுக கொடியில் காவியை சேர்த்துக் கொள்ளலாம் என்றார்.


Leave a Reply