அல்டிமேட் ஸ்டார் அஜீத் பிறந்தநாள்! உற்சாகத்தில் ‘தல’ ரசிகர்கள்

சினிமா என்பது ஒரு சூதாட்டம்; இதில் புத்தி சாதுர்யத்துடன் காய்களை நகர்த்தி கொண்டிருந்தால் மட்டுமே வெற்றி வசப்படும். கொஞ்சம் ஏமாந்தாலும் பெரும் சறுக்கல் தான். சினிமா பின்னணி இல்லாமல் இத்துறையில் சாதனை படைத்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ஒருவர், நம்ம அஜீத்குமார்.

 

போட்டிகளை முறியடித்து, சூதுவாதுகளை சாதுர்யமாக சமாளித்து, கடின உழைப்பால் முன்னேறி, தமிழ் திரையுலகில் ஒளிவீசும் நட்சத்திரம் இவர். தெலுங்கு படத்தில் துணை நடிகராக அறிமுகமாகி, இன்று ‘அல்டிமேட் ஸ்டார்’ ஆக முத்திரை பதித்தவர்.

 

 

குழந்தை நட்சத்திரமாக மலர்ந்து, நடிகையாக வளர்ந்து, ‘அமர்க்களம்’ என்ற படத்தில் நடித்த போது அஜீத்துடன் காதல் மலர்ந்த ஷாலினி, அவரையே மணம் முடித்தார். இனிய இல்லறத்தின் பயனாக இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள்.

 

அஜித், மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருது, இரண்டு முறை ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, மூன்று முறை ‘விஜய்’ விருது, இரண்டு முறை ‘தமிழ்நாடு அரசு விருது’, எனபல்வேறு விருதுகளை வசப்படுத்தியவர்.

 

 

சிறந்த கார் பந்தய வீரர். சர்ச்சைகளில் சிக்காதவர். தன்னடக்கம் கொண்டவர். எல்லாவற்றுக்கும் மேல், தன்னம்பிக்கைக்கும், உழைப்புக்கும் திரையுலகினரால் அடையாளம் காட்டப்படுகிறார் தல’ அஜீத்.

 

ஹேப்பி பர்த் டே அஜீத்!


Leave a Reply