உழைக்கும் வர்க்கத்தினர் உரிமை பெற்ற திருநாள்! அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்!!

உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை, வலிமையை குறிக்கும் மே தினம் இன்று கொண்டாடப்படுகிறது. போராடினால் வெற்றி உறுதி என்பதை உலகிற்கு உரைத்த தினம் இன்று.

 

கடந்த 1886ஆம் ஆண்டு, அமெரிக்காவின் பல்வேறு மாகாண தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இது, 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது.

 

மே 1, 1886 அன்று, அமெரிக்காவில் தொழிலாளர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி என நாடு முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதனால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன.

 

இது அமெரிக்காவை உலுக்கியது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது. ஆனால், அமெரிக்க அரசின் இரக்கமற்ற தாக்குதலில் தொழிலாளர்கள் பலர் கொல்லப்ப்ட்டனர்.

 

எனினும் பல கட்ட போராட்டத்திற்கு பிறகு, 1890ஆம் ஆண்டு தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது. இந்த வெற்றியை குறிக்கும் விதத்தில் மே முதல் நாள் தொழிலாளர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

தொழிலாளர்களின் உழைப்பால் தான் இந்த உலகமே இயங்குகிறது. உழைப்பு இன்றி எந்தப் பொருளும் உருவாவதில்லை. ஜாதி, மதம், இனம், மொழி உணர்வை தாண்டி தொழிலாளர்கள் என்ற உணர்வுடன் ஒன்றுபட்டு போராடினால் வெற்றி கிடைக்கும் என்பதை மே தின வரலாறு நமக்கு சொல்லும் பாடம்.

 

உழைக்கும் தொழிலாளர்களுக்கு குற்றம் குற்றமே இதழின் மே தின வாழ்த்துகள்!


Leave a Reply