நகை அடகு நிறுவனத்தில் 803 பவுன் கொள்ளை! காதலனுடன் ‘நாடகமாடிய ‘ பெண் ஊழியர் கைது

கோவை முத்தூட் நிறுவனத்தில், 803 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், அதன் பெண் ஊழியரை காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.

 

கோவை ராமநாதபுரம் பகுதியில், முத்தூர் மினி என்ற தனியார் நகை அடகு நிறுவனம் உள்ளது. கடந்த 27ஆம் தேதி, அதன் ஊழியர்கள் ரேணுகா தேவி (28), திவ்யா ஆகியோர் இருந்த போது, அவர்களை தாக்கி மர்ம நபர் ஒருவர் லாக்கரில் இருந்த 803 நகைகள், ரூ. 1.34 லட்சம் ரொக்கத்திய கொள்ளையடித்து சென்றார்.

 

இந்த விவகாரம் கோவையில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதுதொடர்பாக, 4 தனிப்படைகளை அமைத்து போலீசார் விசாரித்து வந்தனர். மேலும் சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தினர்.

 

மேலும் சந்தேகத்தின் பேரில் ஊழியர்களை விசாரித்தனர். இதில் ரேணுகா தேவி முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். விசாரணையில் முத்தூட் மினி நிறுவன ஊழியரே, காதலனுடன் சேர்ந்து நாடகமாடியது தெரிய வந்தது.

 

இது தொடர்பாக, பெண் ஊழியர் ரேணுகாதேவி, அவரது காதலன் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட அடகு நகைகள், ரொக்கம் ஆகியனவும், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Leave a Reply