ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு அதிரடியாக சிபிசிஐடி-க்கு மாற்றம்!

ராசிபுரத்தில் நடந்த குழந்தை விற்பனை விவகார வழக்கை, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி. டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், பிறந்த குழந்தையை சட்டவிரோதமாக பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது அம்பலமானது. இது தொடர்பாக, ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் தரகர்களாக செயல்பட்டவர்கள் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறையினரும் தனி குழு அமைத்து, நாமக்கல், ராசிபுரம், கொல்லிமலை பகுதிகளில் பதிவேடுகளை ஆய்வு செய்து வருகின்றனர். கூட்டுறவு வங்கி அலுவலராக இருந்த ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில், இவ்வழக்கை ராசிபுரம் காவல் நிலையத்தில் இருந்து சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டி.ஜி.பி. பிறப்பித்துள்ளார்.


Leave a Reply