திமுக முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவால் காலமானார்

திமுக முன்னாள் எம்.பி. எம்பி வசந்தி ஸ்டான்லி  உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார்.

 

திமுக சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம்  ஆண்டு வரை பதவி வகித்தார். அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். நேற்றிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 56.

 

சிறந்த எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் திகழ்ந்து வந்த வசந்தி ஸ்டான்லி, 1962ஆம் ஆண்டு ஏப்ரல் 27இல் தேவக்கோட்டையில் பிறந்தவர். கட்சி பாகுபாடுகளை கடந்து அனைவரிடமும் இயல்பாக பழகி வந்தவர்.

 

அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply