இலங்கையில் குண்டு வெடிப்பு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம்!

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் கொச்சிக்கடை உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு நடத்திய பயங்கரவாதிகளின் மீது இலங்கை அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

இந்த குண்டு வெடிப்பில் 160 பேர் பலியானதாகவும் 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

அப்பாவி மக்களை அநியாயமாக கொலை செய்யும் தீவிரவாதச் செயலை செய்பவர்கள் யார் என்று கண்டறிந்து கடுமையான தண்டனையை இலங்கை அரசு வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் மெனவும் உலக நாடுகள் ஓன்றினைந்து தீவிரவாதத்தை ஓழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.


Leave a Reply