பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! எளிதாக ரிசல்ட் அறிய இப்படி செய்தால் போதும்!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின்றன. முடிவுகளை அறிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்கள், தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.  இதனை,  www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இரு இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
தேர்வர்கள், தங்களது பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் கூட, மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
அத்துடன், பள்ளி மாணவர்கள் பள்ளி படிவத்தில் அளித்த  மொபைல் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய மொபைல் எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ். வாயிலாக மதிப்பெண் அனுப்பப்படும்.
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply