பிளே ஸ்டோரில் இருந்து டிக்-டாக்’ செயலி நீக்கம்! நீதிமன்ற உத்தரவை அடுத்து அதிரடி நடவடிக்கை

Publish by: --- Photo :


நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக்’ செயலி நீக்கப்பட்டுள்ளது.

 

கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையில் டிக்டாக் செயலி இருப்பதாகவும், அது ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையில் வீடியோக்கள் இடம் பெறுவதால், அதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று,  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, ‘டிக்டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு, கடந்த 3ஆம் தேதி உத்தரவிட்டது.

 

இந்நிலையில், நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று அந்த விசாரணைக்கு வந்தது. அப்போது, டிக்-டாக் செயலியை உருவாக்கிய நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இனிமேல் தவறான நோக்கத்துடன் வீடியோக்கள் பதிவு செய்யப்படமாட்டாது.

 

நீதிமன்ற தடையால் தற்போது டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. தடையை விலக்க வேண்டும் என்று வாதாடினார். ஆனால், நீதிபதிகள் இதை ஏற்கவில்லை.

 

இச்சூழலில், டிக் டாக் செயலியை இந்தியாவில் கூகுள் நிறுவனம் முடக்கியுள்ளது. கூகுள் பிளேஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலியை இனி பதிவிறக்கம் செய்ய முடியாது.

 

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு, கடிதம் அனுப்பியிருந்தது. எனினும், ஆப்பிள் தளங்களில் டிக் டாக் செயலி இன்னும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply