ஆண்டிப்பட்டியில் சிக்கிய ரூ.1.50 கோடி அதிமுக பணம்! அமமுக -கேண்டிடேட் அதிரடி பேட்டி!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால், கைப்பற்றப்பட்ட பணம் அதிமுகவுக்கு சொந்தமானது என ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியின் அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

“அதிமுக பிரமுகருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் பணம் இருப்பதாக நாங்கள் தான் தகவல் தந்தோம். ஆனால், அதிமுகவை காப்பாற்றுவதற்காக அந்த பணம் அமமுகவின் பணம் என பொய்யாக குற்றம்சாட்டுகிறார்கள். போலீசார் வானத்தை நோக்கி சுடாமல், எங்களை அச்சுறுத்துவதற்காக டம்மி புல்லட் மூலம் வணிக வளாகத்திலேயே சுட்டனர்”


Leave a Reply