குப்பை எரிப்பதால் மூச்சுத்திணறல்! எரிச்சலால் வாகன ஓட்டிகள் கதறல்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எரிக்கப்படும் குப்பையால், வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.

 

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் கழிவு பொருட்களான பல்வேறு விதமான பொருட்கள் அப்புறம் படுத்தாமல் உள்ளது. இதை அங்குள்ள சிலர் தீயிட்டு கொளுத்தி வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

 

இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களும், அவ்வழியாக வாகனத்தில் செல்வபவர்களும் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சலால் அவதிப்படுகின்றனர்.

 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயே நடக்கும் இதை கலெக்டரும் கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் புலம்புகின்றனர். இதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

– மகேந்திரன், இராமநாதபுரம்.


Leave a Reply