வாக்காளர்களை தேடி வந்த ராசா ! வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

நீலகிரி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ. ராசா, மேட்டுப்பாளையம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

கோவைமாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா, மேட்டுப்பாளையத்தில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். மேட்டுப்பாளையத்தில் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ராசா பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளை சேர்ந்த கிராம பகுதிகளில் ஆ.ராசா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  கிராமம் கிராமமாக வாகனத்தில் சென்று, ஆங்காங்கே நின்று பொதுமக்களிடம் உரையாற்றினார்.

 

நான் ஏற்கனவே இப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளேன், கடந்த முறையை காட்டிலும் மேலும் சிறப்பாக மக்கள் பணியாற்றிட எனக்கு வாக்களிக்க வேண்டும் . நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் இரண்டு இடங்களில் எம்.பி அலுவலகம் திறந்து பணியாற்றியவன் என்ற முறையில் மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று அப்போது அவர் கோரிக்கை விடுத்தார்.

 

பிரச்சாரத்தின் போது திமுக மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன்,ஈ னைகட்டி சுரேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ அருண்குமார்,க ல்யாண சுந்தரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

-விஜயகுமார், கோவை.


Leave a Reply