--- --:--:-- --

ஆட்டோவில் வைத்திருந்த நகை, பணம் திருடிய 2 பேர் கைது..!

5

சென்னை திருவான்மையூரில் ஆட்டோவில் வைத்திருந்த நகை பையை திருடி சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். திருவான்மையூரை சேர்ந்த ஜெயந்தி என்பவர் பையை ஆட்டோவில் வைத்துவிட்டு சாப்பிட சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த பொழுது பையை காணவில்லை.

 

அதில் 18 கிராம் தங்க நகையும், 40 ஆயிரம் ரூபாய் பணமும் இருந்ததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆட்டோவில் இருந்து பையை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

 

அவர்களை கைது செய்த காவல்துறையினர் நான்கரை கிராம் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். 25 ஆயிரம் ரூபாய் மது குடித்தே தீர்த்ததாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon