--- --:--:-- --

தண்ணீரில் கலந்து குடிக்கக்கூடிய 2 DG பெருந்தொற்று தடுப்பு மருந்து இன்று வெளியீடு..!

7

ண்ணீரில் கலந்து குடிக்கக் கூடிய பவுடர் வடிவ 2ஜிபி தடுப்புமருந்து இன்று வெளியிடப்படுகிறது. டி டியோக்ஸி, டி குளுக்கோஸ் ஆகியவற்றின் கலவையில் டிஆர்டிஓ அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்டிட்யூட் ஆஃப் நியூக்ளர் மெடிசன் அண்ட் சயின்ஸ் டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து இது 2 DG பெருந்தொற்று தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது.

 

மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்கியதையடுத்து 2ஜி மருந்து நோயாளிகள் மீது பரிசோதனை நடத்தப்பட்டது. 2 DG பெருந்தொற்று தடுப்பு மருந்து நோயாளிகளுக்கு சிறப்பாக செயல்படுகிறது என்றும் ஆக்ஸிஜனை நம்பி இருக்கும் நோயாளிகளுக்கு நல்ல பலன் அளிக்கிறது எனவும் பரிசோதனை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து 2 DG பெருந்தொற்று தடுப்பு மருந்தை அவசர காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. தண்ணீரில் கலந்து குடிக்கக் கூடிய பவுடர் தடுப்பு மருந்து இன்று வெளியிடப்படுகிறது.

 

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் இன்று கூட்டாக வெளியிடுகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon