--- --:--:-- --

புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை..!

6

புதிய புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

 

வால்பாறை சிறு குன்றின் பெரியகல்லாறு, சின்ன கல்லாறு, சோலையாறு, அக்காமலை, கருமலை எஸ்டேட் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மழையால் மரங்கள் மின் கம்பத்தின் மேல் விழுந்து இரவு முழுவதும் மின்சாரம் விநியோகம் தடைபட்டது.

 

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூரில் புயல் காரணமாக விடிய விடிய மழை பெய்துள்ளது. வண்டலூர் தேவரபள்ளி ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பலத்த காற்று காரணமாக கொளப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன.

 

அறுவடைக்கு ஒரு சில நாட்களே இருந்த நிலையில் வாழை மரங்கள் சேதம் அடைந்திருப்பதால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதனிடைய கூடலூரில் மழை பாதிப்பு நிவாரண தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

Leave a Reply

Right Menu Icon