கொரொனா நோயாளிகளை தரையில் அமர வைத்து சிகிச்சை..!
புதுச்சேரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரையில் அமர வைத்து சிகிச்சை அளிக்கப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. புதுச்சேரியில் கொரோனாவால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்று வரும் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு படுக்கை இல்லாமல் தரையில் அமர வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் விடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
புதுச்சேரியில் போதிய படுக்கை வசதிகள் உள்ளதாக அரசு தெரிவித்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






