பிரியாணி செய்து கொடுக்க மறுத்ததால் 12 வயது சிறுமி தற்கொலை..!
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தாய் பிரியாணி செய்து கொடுக்க மறுத்ததால் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் கிழக்கு கடற்கரை தெருவை சேர்ந்தவர் பழனி. இவர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி தேவி இவர்களுக்கு 12 வயதில் தீபிகா என்ற ஒரு மகள் உள்ளார். தீபிகா குன்றத்தூரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். வரும் புத்தாண்டு தினத்தன்று தனது தாயுடன் பிரியாணி செய்து தரும்படி கேட்டுள்ளார்.
புத்தாண்டு தினம் வெள்ளிக்கிழமையன்று வருவதால் அதனால் பிரியாணி செய்து கொடுக்க முடியாது என அவரது தாய் தேவி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனமுடைந்த சிறுமி தீபிகா தனது அறைக்குள் சென்றுவிட்டார்.
அப்போது சிறுமியின் தாய் வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்த தேவி தனது மகள் அவளது அறையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு குன்றத்தூர் போலீசார் விரைந்துள்ளனர். இறந்து போன சிறுமி தீபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.






