--- --:--:-- --

ஹெலிகாப்டர் விபத்தில் நூலிழையில் உயிர்தப்பிய யோகி..!

9

த்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் நூலிழையில் உயிர் தப்பினார். உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வாரணாசிக்கு வருகை தந்தார்.

 

அங்கு தனது பணிகளை முடித்துவிட்டு அரசு தங்கும் விடுதியில் ஓய்வெடுத்தார். பின்னர் வாரணாசிக்குட்பட்ட சுல்தான்பூர் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய புறப்பட்டார்.

 

ஆனால் அவர் ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஹெலிகாப்டரை பறவைகள் தாக்கின. ஒரு ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நூலிழையில் உயிர்தப்பினர்.

 

Right Menu Icon