உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு..!
உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கே சாலமன் தீவுக்கூட்டம் அருகே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாறை 34மீ அகலம், 32மீ நீளம், 5.5மீ உயரத்துடன் காணப்படுகிறது.
இந்த பவளப்பாறை 300 500 ஆண்டுகள் பழமையானது என்றும், தற்போதுவரை ஆரோக்கியமாகவே உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாறைகள் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வில் பெரும்பங்காற்றுகின்றன.






