ஊர்க்காவல் படையினர் உயிரிழப்பு: இழப்பீடு அதிகரிப்பு
ஊர்க்காவல் படை வீரர்கள் உயிரிழந்தால் அளிக்கப்படும் இழப்பீடு தொகையை அதிகரித்து TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பணியின்போது உயிரிழக்கும் ஊர்க்காவல் படை வீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை ரூ.15,000இல் இருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தோருக்கான தொகை ரூ.10,000இல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.






