கோவையில் இருந்து கொல்கத்தாவிற்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்ட தொழிலாளர்கள்!
கோவையில் வேலை செய்துவரும் வடமாநிலத் தொழிலாளர்களிடம் தொடர்ந்து வாடகை கேட்டு தொந்தரவு செய்ததால் கோவையிலிருந்து கொல்கத்தாவிற்கு மிதிவண்டியில் பயணம் மேற்கொண்டனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
சின்னியம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பஞ்சாலையில் கல்கத்தாவைச் சேர்ந்த 6 பேர் வேலை செய்து வந்துள்ளனர். பொது முடக்க உத்தரவால் அவர்களுக்கு வேலை இல்லாததால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து உள்ளனர்.
இந்த நிலையில் வாடகை தரும்படி வீட்டின் உரிமையாளர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததால் அவர்கள் ஆறு பேரும் கோவையிலிருந்து கல்கத்தாவிற்கு மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்வீட்டு உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அந்த வாடகை வீட்டிலேயே தங்க வைத்தனர்.
மேலும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல தமிழக அரசு ஏற்பாடு செய்து வரும் நிலையில் அதற்கான வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.







