--- --:--:-- --

வருமானம் இழந்ததால் 5 குழந்தையின் தந்தை தற்கொலை!

13

ஊரடங்கால், வேலையின்றி வருமானம் இல்லாததால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 5 குழந்தைகளுக்கு தந்தையான டீ கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது. இந்த சம்பவம் சேலம் சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிஞ்சி நகரை சேர்ந்த அபுரோஸ் என்பவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

 

ஊரடங்கால் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது .இதனால் வருமானம் இன்றி அபுரோஸ்சுக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை தனது மகனை எழுப்பி பேசிவிட்டு அறைக்குள் சென்ற அபுரோஸ் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

Leave a Reply

Right Menu Icon