--- --:--:-- --

72 கி.மீ-க்கு மேல் பெண்கள் ஆண் துணை இல்லாமல் பயணம் செய்யத் தடை..!

8

ப்கானிஸ்தானில் பெண்கள் நெருங்கிய உறவினர்களின் துணையில்லாமல் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

 

குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. நெருங்கிய உறவினர்களின் துணை இல்லாமல் 72 கிலோ மீட்டர் தூரத்தில் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பர்தா அணியாத பெண்களை அழைத்துச் செல்லக் கூடாது என வாகன உரிமையாளர்களுக்கு தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தாலிபன்கள் இந்த உத்தரவுக்கு பெண்கள் உரிமைகள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon