--- --:--:-- --

வீட்டில் தனியாக இருந்த பெண், 4 வயது குழந்தை கொலை..!

2

பெங்களூர் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டில் தனியாக இருந்த 35 வயதான பெண் மற்றும் அவரது நான்கு வயது குழந்தை வெட்டிக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வேம்பூர் என்ற பகுதியில் வசிக்கும் நபர் வேலை விஷயமாக வெளியே சென்றிருந்த நிலையில் அவரது மனைவி சந்திரகலா மற்றும் 4 வயது குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

சந்திரகலாவின் சகோதரி அந்த வீட்டிற்கு வந்து பார்த்தபோது தான் இந்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ய சென்ற பெங்களூரு கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் முருகன் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Right Menu Icon