கணவனை சிக்க வைக்க மனைவி போட்ட இன்ஸ்டா பிளான்..!
வெளிநாட்டில் இருந்து கொண்டு தமிழ் நாட்டில் பாலியல் தொழில் செய்து வந்த கணவர் மீது மனைவியே காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அருண் ஜோஷி என்பவர் பக்ரைனில் வேலை பார்த்து வரும் நிலையில் அவரது கணினியில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்ததை மனைவி கண்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் வேறு ஒரு பெண் போல போலி கணக்கு தொடங்கி தான் பெரிய தொழில் அதிபரின் மகள் என்றும் தன்னைக் காண சென்னை வருமாறும் கணவனை அழைத்து அவருக்கான ஃப்ளைட் டிக்கெட்டை புக் செய்துள்ளார்.
திருவான்மையூர் சொகுசு விடுதியில் அறை எடுத்து இருப்பதாக கூறியதை நம்பி அங்கு சென்று அருண் ஜோஷியை காவல்துறையினர் கையும், களவுமாக கைது செய்தனர். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு கைப்பேசிகளில் இருந்த ஆபாச உரையாடல்கள், புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





