13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது..!
பரமக்குடியில் பள்ளி மாணவிகள் 13 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெருமாள் கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 197 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதனிடையே இங்கு ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு இலவச எண்ணை தொடர்பு கொண்டுள்ளனர். அப்பொழுது கணித ஆசிரியர் ஆல்பர்ட் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜ் ஆகியோர் தங்களை அடிக்கடி தொடுவதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
மேலும் போனில் தொடர்பு கொண்டு தங்களிடம் பாலியல் ரீதியாக பேசி வருவதாக அவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அப்பொழுது 11 மாணவிகளின் புகாரை உறுதி செய்தனர். அதன் தொடர்ச்சியாக சமூக அறிவியல் ஆசிரியரை கைது செய்த போலீசார் மற்றொரு ஆசிரியர் ஆல்பட்டை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





