தமிழகத்தில் சில மாவட்டங்களில் பரவலாக பெய்த மழை..!
கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் சூறை காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பொழிந்தது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர், கீழவளவு, கருங்காலக்குடி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்ததால் மலைத் தோட்ட காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
கிருஷ்ணகிரியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மழை பெய்துள்ளது. ஓசூரில் திடீரென கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.







